Thursday, August 13, 2015

ஸ்ரீ ஆண்டாள் திருக்கல்யாணம்



ஸ்ரீ ஹரி:
ஸ்ரீ ஆண்டாள் திருக்கல்யாணம்
வாரணம் ஆயிரம் சூழ வலஞ்செய்து
நாரணன் நம்பி நடக்கின்றான் என்று எதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறம் எங்கும்
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ! நான்.

நாளை வதுவை மணமென்று நாளிட்டு
பாளைகமுகு பரிசுடைப் பந்தற்கீழ்
கோளரி மாதவன் கோவிந்த னென்பான் ஓர்
காளைபுகுதக் கனாக்கண்டேன் தோழீ! நான்.

இந்திரனுள்ளிட்ட தேவர் குழாமெல்லாம்
வந்திருந்து என்னை மகட்பேசி மந்திரித்து
மந்திரக் கோடியுடித்தி மணமாலை
அந்தரி சூட்டக் கனாக்கண்டேன் தோழீ! நான்.

நால்திசைத் தீர்த்தம் கொணர்ந்து நனிநல்கி
பார்ப்பனச் சிட்டர்கள் பல்லாரெடுத் தேத்தி
பூப்புனை கண்ணிப் புனிதனோடு என்தன்னை
காப்பு நாண்கட்டக் கனாக்கண்டேன் தோழீ! நான்.

கதிரொளி தீபம் கலசமுடனேந்தி
சதிரிள மங்கையர்தாம் வந்து எதிர்கொள்ள
மதுரையார் மன்னன் அடிநிலைதொட்டு எங்கும்
அதிரப்புகுதக் கனாக்கண்டேன் தோழீ! நான்.

மத்தளம் கொட்ட, வரி சங்கம் நின்று ஊத,
முத்து உடைத்தாமம் நிரை தாழ்ந்த பந்தற் கீழ்,
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீ! நான்.

வாய்நல்லார் நல்லமறையோதி மந்திரத்தால்
பாய்சிலை நாணல்படுத்துப் பரிதி வைத்து
காய்சினமா களிறன்னான் என்கைப்பற்றி
தீவலஞ்செய்யக் கனாக்கண்டேன் தோழீ! நான்.

இம்மைக்கும் ஏழேழ்பிறவிக்கும் பற்றாவான்
நம்மையுடையவன் நாரயணன் நம்பி
செம்மையுடைய திருக்கையால் தாள்பற்றி
அம்மி மிதிக்கக் கனாக் கண்டேன் தோழீ நான். 

வரிசிலைவாள் முகத்து என்னைமார் தாம் வந்திட்டு
எரிமுகம்பாரித்து என்னை முன்னே நிறுத்தி
அரிமுகன் அச்சுதன் கைம்மேல் என்கைவைத்து
பொரிமுகந்தட்டக் கனாக்கண்டேன் தோழீ! நான்.

குங்கும மப்பிக் குளிர்சாந்த மட்டித்து
மங்கலவீதி வலஞ்செய்து மணநீர்
அங்கு அவனோடும் உடன்சென்று அங்கு ஆனைமேல்
மஞ்சனமாட்டக் கனாக்கண்டேன் தோழீ! நான்.

ஆயனுக்காகத் தான் கண்ட கனாவினை
வேயர்புகழ் வில்லிபுத்தூர்க் கோன் கோதைசொல்
தூய தமிழ்மாலை ஈரைந்தும் வல்லவர்
வாயும் நன்மக்களைப் பெற்று மகிழ்வரே.

Saturday, October 11, 2014

ஸ்ரீ கோவிந்த நாமாவளி !



ஸ்ரீ கோவிந்த நாமாவளி
ஸ்ரீநிவாஸா கோவிந்தா
ஸ்ரீ வேங்கடேசா கோவிந்தா
பக்தவத்ஸல கோவிந்தா
பாகவதப்ரிய கோவிந்தா
நித்ய நிர்மல கோவிந்தா
நீல மேகச்யாமள கோவிந்தா
புராணபுருஷ கோவிந்தா
புண்டரீகாஷ கோவிந்தா
நந்தமுகுந்த கோவிந்தா
நவ நீத சோர கோவிந்தா
கோவிந்த ஹரி கோவிந்தா
கோகுல நந்தன கோவிந்தா
பாப விமோசன கோவிந்தா
துஷ்ட ஸம்ஹாரக கோவிந்தா
துரித நிவாரண கோவிந்தா
சிஷ்ட பரிபாலக கோவிந்தா
கஷ்ட நிர்த்தூத கோவிந்தா
பாலக போஷக கோவிந்தா
பாஹி மாம் ரக்ஷக கோவிந்தா
கோபிஜனலோல கோவிந்தா
கோவர்த்தனோத்தர கோவிந்தா
ஸீதாரக்ஷக கோவிந்தா
தசரத நந்தன கோவிந்தா
தசமுக மர்த்தன கோவிந்தா
பக்ஷி வாஹன கோவிந்தா

பாண்டவப்ரிய கோவிந்தா
மத்ஸ்ய கூர்ம கோவிந்தா
வரஹா நரஸிம்ஹ கோவிந்தா
வாமந பார்கவ கோவிந்தா
ராம க்ருஷ்ண கோவிந்தா
பௌத்த கல்கி கோவிந்தா
வேணுகோபால கோவிந்தா
வேங்கட விட்டல கோவிந்தா
தரித்ரஜனபரீக்ஷக கோவிந்தா
தர்ம ஸம்பாதித கோவிந்தா
அனாதரக்ஷக கோவிந்தா
ஆபத்பாந்தவ கோவிந்தா
சரணகதவத்ஸல கோவிந்தா
கருணா ஸமுத்திர கோவிந்தா
கமலதளாக்ஷ கோவிந்தா
காமிதபலதாயக கோவிந்தா
பாபா நாசக கோவிந்தா
சேஷசாயி கோவிந்தா
ஸ்ரீமுத்ராங்கித கோவிந்தா
மஹோத்ஸவதேவ கோவிந்தா
ஹரே ராம ஹரே ராம 
ராம ராம ஹரே ஹரே
ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண
க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே

கவிஸந்தரண உபநிஷத்

Saturday, September 21, 2013

ஸ்ரீ ராம ராம ராம


அவசரகதியில் செல்லும் நமது அன்றாட வாழ்வில் எளிதாக சொல்ல கூடிய மந்திரம் ஸ்ரீ ராம நாம மந்திரம்.
மிகுந்த பலனை அள்ளித் தரும் மந்திரமான இது, எந்தவொரு கட்டுப்பாடும் இல்லாதது.நேரம் இடம் போன்றவற்றை கடந்து மனத்தாலும் உதட்டாலும் சொல்ல இடர்களை களையும் மந்திரம் இது.
எளியது வலியது நினைக்க நினைக்க இனியது ஸ்ரீ ராம மந்திரம்.

இதன் சிறப்பை ஸ்ரீபார்வதி தேவியே ஸ்ரீ பரமேஷ்வரனிடம் சஹஸ்ர நாமத்தை எளிய வழியில் சொல்லும் உபாயத்தை கேட்க ,ஸ்ரீ பரமேஸ்வரன் ஸ்ரீராம நாமத்தை மூன்று முறை சொன்னாலே ஸ்ரீ சஹஸ்ர நாமத்தை சொன்னதற்கு ஈடானது என்றார்.
எனில்,இந்த நாமத்தின் மஹிமையை நாம் புரிந்து கொள்ளலலாம்.

ஸ்ரீ ராம ராம ராம

Tuesday, March 12, 2013

ஏறு மயில் ஏறி விளையாடும் முகம்




ஏறு மயில் ஏறி விளையாடும் முகம் ஒன்று
ஈசனுடன் ஞான மொழி பேசும் முகம் ஒன்று
கூடும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்று
குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்று
மாறு படு சூரரை வடித்த முகம் ஒன்று
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்று
ஆறுமுகமான பொருள் நீ அருள வேண்டும்
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமானே!

Tuesday, November 13, 2012

சரவணபவ மந்திரம்

சரவணபவ மந்திரம்
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் க்லீம் ஸௌம்
சரவணபவ தேவாய ஸ்வாக !



திருமுருகன் முன் கற்பூரத்தை ஏற்றி வைத்து இம்மந்திரத்தை 16 முறைஜெபித்து கற்பூரம் அணைந்தவுடன் விபூதியை இட்டுக் கொள்ளலலாம். இதனால் சகல வினைகளும் தீரும். சத்ரு பயம் நீங்கும்.
வேல் வடிவம் தங்கம்,வெள்ளி அல்லது செப்பு ஆகியவற்றில் ஏதெனும் ஒன்றில் செய்து வழிபடலாம்.வேலின் மத்தியில் சிவப்பு கல் பதிக்கப்பெற்றால் இன்னும் சிறப்பு.

வண்டியில் வத்து வழிபட நன்மை பயக்கும்.விபத்து நேராது.அதற்கு முன் வேலினை பூஜை அறையில் வைத்து 45 நாட்கள் மந்திரம் ஜெபித்து வழிபடவும்.  

Wednesday, October 24, 2012

துளசி மந்திரம்

ஸ்ரீ துளஸ்யை நம:

தியான மந்திரம்

 
யந்மூலே ஸர்வதீர்த்தாநி யந்மத்யே ஸர்வதேவதா:
யதக்ரே ஸர்வ வேதாச்ச துளஸீம் தாம் நமாம்யஹம்.


 

Thursday, December 1, 2011

ஸ்ரீலஷ்மி தியான ஸ்லோகம்

லஷ்மி தியான ஸ்லோகம்
வந்தே பத்மகாரம் பிரசன்னவதனம் சௌபாக்யதாம் பாக்யதாம்
ஹஸ்தாப்யா மப்யப்ரதாம் மணிகணைர் நானாவிதைர் பூஷிதாம் 
பக்தாபீஷ்ட பலப்ரதாம் ஹரிஹர பிரஹ்மாதிபிஸ் சேவிதாம் 
பார்ஸேவே பங்கஜஸங்க்க   பத்மநிதிர் யுக்தாம் ஸதா ஸக்திபி: