Friday, April 22, 2011

நாளும் கோளும் நன்மை செய்ய

கந்தர் அலங்காரம்:
நாள் என் செயும்: வினை தான் என் செயும்  
எனை நாடி வந்த கோள் என்செயும்
கொடுங்கூற்று என்செயும் -குமரேசர்
இரு தாளும் சிலம்பும் சதங்கையும்
தண்டையும் சண்முகமும் தோளும் கடம்பும்
எனக்கு முன்னே வந்து தோன்றிடினே !!

(கந்தர் அலங்காரம் 38  நாள் என்செயும்  )

கோளறு பதிகம்
வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி
சனிபாம்பி ரண்டு முடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.  

திரு ஞானசம்பந்தர் பாடிய தேவாரப் பாடல்களில் இரண்டாம் திருமுறையில் கோளறு பதிகம் எனும் தலைப்பில் பாடப் பெற்ற நூலின் முதல் பாடல். நவகோள்களின் தாக்கத்தில் இருந்து நம்மை காப்பாற்றும்.
திருச்சிற்றம்பலம்


 

 
குளிகையில் எதிர்மறையான செயல்களை செய்ய கூடாது.
முகூர்த்த லக்னத்தில் ராகு-எமகண்டம் குளிகை நேரம் தவிர்க்கப் பட வேண்டும்.
திருமணத்திற்கு முகூர்த லக்னம் குறிக்கும் போது அந்த நேரத்தில் ராகு காலம்-எமகண்டம் மட்டுமின்றி குளிகை நேரமும் வரக் கூடாது.
குளிகை நேரத்தில் முதன் முதலாக ஒரு செயலை செய்தால் அதை மீண்டும் செய்ய நேரிடும். நம் வழ்க்கையில் எவை எல்லாம் மறுபடியும் நடந்தால் நல்லதோ அவற்றை மட்டும் குளிகையில் செய்ய வேண்டும். சொத்து வாங்குவது, கிரஹபிரவேசம் செய்வது,வெள்ளி, பொன் நகைகள் வாங்குவது, சேமிப்பு துவங்குவது, கடன் அடைப்பது, வெளி நாடு செல்வது போன்றவை செய்தால் அவை மீண்டும் மீண்டும் நடக்கும்.