Thursday, March 24, 2011

யாதுமாகி நின்றாய் காளி

யாதுமாகி நின்றாய் காளி
எங்கும் நீ நிறைந்தாய் 
தீது நன்மை எல்லாம் காளி 
தெய்வ லீலை அன்றோ 
பூதம் ஐந்தும் ஆனாய் காளி
பொறிகள் ஐந்தும் ஆனாய்
போதமாகி நின்றாய் காளி
பொறியை விஞ்சி நின்றாய் 
இன்பமாகி விட்டாய் காளி
என்னுள்ளே புகுந்தாய் பின்பு
நின்னை அல்லாமல் காளி
பிரிது நானும் உண்டோ ?
அன்பளித்து விட்டாய் காளி
ஆண்மை தந்து விட்டாய்
துன்பம் நீக்கி விட்டாய் காளி
தொல்லை போக்கி விட்டாய்

 
மகாகவி பாரதியார் 

குரு பிரம்மா குரு விஷ்ணு

 ஸூக்லாம்பர தரம் விஷ்ணும் ஸசிவர்ணம் சதுர்புஜம்

பிரன்ன வதனம் த்யாயேத் ர்வ விக்னோப ஸாந்தயே

குரு பிரம்மா குரு விஷ்ணு 
குருதேவா மகேச்வரா 
குரு சாக்ஷாத் பரம் பிரம்மா 
தஸ்மை ஸ்ரீ குருவே நமஹா ! 

கணபதி என்றிட கலங்கும் வல்வினை

கணபதி என்றிட கலங்கும் வல்வினை 
கணபதி என்றிட காலனும் கை தொழும் 
கணபதி என்றிட கருமம் ஆதலால் 
கணபதி என்றிட கவலை தீருமே ! 

ஸ்ரீ ராகவேந்திரர் மந்திரம்

ஸ்ரீ ராகவேந்திரர் த்யான மந்திரம்

 பூஜ்யாய ஸ்ரீ ராகவேந்த்ராய 
சத்யா தர்ம ரதாய ச்ச
பஜதாம் கல்ப வ்ருக்ஷாய 
நமதாம் காமதேனுவே ! 

ஆறிரு தடந்தோள் வாழ்க

ஆறிரு தடந்தோள் வாழ்க 
ஆறுமுகம் வாழ்க வெற்பைக் 
கூறு செய் தனி வேல் வாழ்க 
குக்குடம் வாழ்க -செவ்வேல் 
ஏறிய மஞ்ஞை வாழ்க 
ஆணை தன் அணங்கு வாழ்க
மாறிலா வள்ளி வாழ்க 
வாழ்கசீர் அடியார் எல்லாம் !


வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா !