Saturday, May 14, 2011

சுப சகுனங்கள்: suba sakunankal

சுப சகுனங்கள்

கன்னி, பசு, ரத்தினம்,மலர், தயிர், யானை, குதிரை, பல அந்தணர்கள், கொடி, எரியும் அக்னி, பூர்ண கும்பம், காளை, தாமரை, சந்தனம், தனியங்கள், பிணம், வேசி, வெள்ளைமாலை, அக்ஷதை, எள்ளு, சலவைத்துணி, குழந்தையுடன் உள்ள பெண், கன்றுடன் கூடிய பசு, சங்கு, வாத்திய ஒலி, மாமிசத்துண்டு, நெய், பால் இவை எதிரில் வந்தால் உத்தமம்.
போ, வாழ்க, நன்றாக இரு, செவ்வாய், எழு, புறப்படு முதலிய ஒலி வருமானால் நல்லது.

அசுப சகுனங்கள்
மோர், எண்ணெய் தேய்த்துக் கொண்டவன், தலைமுடி விரித்துப் போட்டிருப்பவள், சடைமுடியுடையவன், ஊர்சுற்றுபவன், குயவர், சிவந்த மலர், ஈரத்துணி, உப்பு, பன்றி, வலதுகால் தடுக்குதல், அழுகை, பாம்பு, முயல் இவை எதிரில் வரலாகாது.
வா, நில், எங்கே போகிறாய் என்ற ஒலி ஆகாது.

Thursday, May 5, 2011

ஸ்ரீ ராமஜெயம்: sri raamajeyam

ஸ்ரீ ராமஜெயம்


"தீர்த்த யாத்திரை, பாப விமோசனம்:
கோபுர தரிசனம், கோடி புண்ணியம்" என்பார்கள். ஆண்டவனால் படைக்கப்பட்ட அனைத்து உயிர்களிலும் தனித்து நிற்பதும், சிறப்பு வாய்ந்ததும் மனிதப் பிறவி ஒன்று தான். மனிதர்களாகப் பிறவி எடுத்த நாம், நாம் எடுத்த பிறவி நன்மை அடைய பல க்ஷேத்திரங்களுக்குச் சென்று ஆண்டவனை தரிசித்து புண்ணியத்தைச் சேர்த்துக் கொள்கிறோம். இதற்கும் மேலாக நாம் இருந்த இடத்திலேயே நாம் நமக்கு வேண்டியதை மனதில் எண்ணி ஸ்ரீ ராமஜெயம் எனும் மந்திரத்தை தொடர்ந்து எழுதுவதினால் நாம் நினைத்த காரியம் உறுதியாக கைகூடும் என்பதில் சற்றும் ஐயமில்லை. மேலும் இதனால் ஏற்படும் பலங்களும், புண்ணியங்களூம் சொல்லிலும், கணக்கிலும் அடங்கா. எழுதும் பொழுது மௌனமாகவும், கவனத்துடன் மனதை ஒரு நிலைப்படுத்தி எழுதுவது மிக மிக அவசியமாகும். ராம நாமம் எங்கு ஒலித்தாலும் அங்கெல்லாம் நம் கண்களுக்குப் புலப்படாமல், தமது கண்களில் கண்ணீர் மல்கி ஆஞ்சனேயர் குடி கொண்டிருப்பாராம். ஆதலால் நாம் ஆஞ்சனேயரின் அன்புக்கும் பக்திக்கும் ஆளாகின்றோம். இதனால் நாம் சிற்றின்பத்திலிருந்து விலகி பக்தியை அடைகின்றோம். மனதில் தைரியத்தை அளித்து நம்மைக் காக்கின்றார் ஆஞ்சனேயர்.

(((((((((( ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் )))))))))) 

Monday, May 2, 2011

"ஹரே கிருஷ்ண" மஹா மந்திரம் என்றால் என்ன?

மஹா மந்திரம் என்றால் என்ன?


மந்திரம் என்றால் மனதை விடுவிப்பது என்று பொருள். அதாவது 'மன்' என்றால் மனம். 'திரா' என்றால் "விடுவிப்பது". மனதை அதன் துன்பங்களில் இருந்து விடுவிப்பது மந்திரம் ஆகும். ஒரு மந்திரம், ஒரு குறிப்பிட்ட துன்பத்தை மட்டும் நீக்க உதவலாம். ஆனால் மஹா மந்திரம் எனப்படுவது எல்லாவிதமான துன்பங்களிருந்தும் மனதை விடுவிக்கும் சக்தி வாய்ந்ததாய் இருக்க வேண்டும்.
மனச்சஞ்சலங்கள், மனச்சோர்வு, மனஅழுத்தம், மனக்குழப்பம், பாவ விளைவுகள், தீய சிந்தனைகள், சண்டை சச்சரவுகள், காம, க்ரோத, மோஹ, லோப, மத, மாச்சர்யம் மற்றும் அனைத்து விதமான மனதின் துன்பங்களில் இருந்தும் மனதை விடுவிக்கும் சக்தி "ஹரே கிருஷ்ண" மந்திரத்திற்கு இருப்பதால் இம்மந்திரத்தை "மஹா மந்திரம்" என்று வேத சாஸ்த்திரங்கள் அழைக்கின்றன.
ஹரே கிருஷ்ண மஹாமந்திரத்தைச் சொல்லக் கட்டுபாடுகள் எதுவும் இல்லை. உச்சரிக்கும் முறையானது, நம் காதுகளுக்கு கேட்கும் வகையில் தினமும் குறைந்த பட்சம் 108 முறை ஹரே கிருஷ்ண மந்திரத்தை உச்சரித்து வந்தால் மன அமைதியையும் சந்தோஷத்தையும் பெறலாம்.


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே

((((((((((((((((*))))))))))))))))

Sunday, May 1, 2011

வெண்கலக் குரலோன் தெய்வத் திரு சீர்காழியின் ஆண்டுக்கு ஆண்டு சுபதினம்

வெண்கலக் குரலோன் தெய்வத் திரு சீர்காழியின் சுபதினம்

ஆண்டுக்கு ஆண்டு தேதிக்குத் தேதி ஆயிரம் இருக்குது சுப தினம்
அடுத்தவர் நலத்தை நினைப்பவர் தமக்கு ஆயுள் முழுவதும் சுப தினம்
ஆண்டுக்கு ஆண்டு தேதிக்குத் தேதி ஆயிரம் இருக்குது சுப தினம்
அடுத்தவர் நலத்தை நினைப்பவர் தமக்கு ஆயுள் முழுவதும் சுப தினம்

வள்ளுவன் பிறந்து குறளைச் சொன்னால் அறிவுக்கு அது தான் சுப தினம்
வள்ளுவன் பிறந்து குறளைச் சொன்னால் அறிவுக்கு அது தான் சுப தினம்
புத்தன் பிறந்து போதனை செய்தால் அன்புக்கு அதுதான் சுபதினம்
புத்தன் பிறந்து போதனை செய்தால் அன்புக்கு அதுதான் சுபதினம்

காந்தி பிறந்து விடுதலை தந்தார் காந்தி பிறந்து விடுதலை தந்தார்
உரிமைக்கு அதுதான் சுப தினம்

ஒருவன் துணிந்து தியாகம் செய்தால்
உலகுக்கு அதுதான் சுப தினம்

ஆண்டுக்கு ஆண்டு தேதிக்கு தேதி ஆயிரம் இருக்குது சுப தினம்
அடுத்தவர் நலத்தை நினைப்பவர் தமக்கு ஆயுள் முழுவதும் சுப தினம்


நிறைகுடம் போல் ஒரு திரைப்படம் வந்தால்
ரசிகனுக்கு அதுதான் சுப தினம்
நிறைகுடம் போல் ஒரு திரைப்படம் வந்தால்
ரசிகனுக்கு அதுதான் சுப தினம்
உழுதுண்டு வாழும் மக்களுக்கெல்லாம்
அறுவடை நாளே சுப தினம்
உழுதுண்டு வாழும் மக்களுக்கெல்லாம்
அறுவடை நாளே சுப தினம்

லாட்டரி சீட்டில் லட்சம் விழுந்தால்
கிடைத்தவருக்கு அது சுபதினம்
லாட்டரி சீட்டில் லட்சம் விழுந்தால்
கிடைத்தவருக்கு அது சுபதினம்
வள்ளலின் கையில் பல லட்சம் இருந்தால்
எளியவர்க்கெல்லாம் சுப தினம்

ஆண்டுக்கு ஆண்டு தேதிக்கு தேதி ஆயிரம் இருக்குது சுப தினம்
அடுத்தவர் நலத்தை நினைப்பவர் தமக்கு ஆயுள் முழுவதும் சுப தினம்.

--------------------------------------------------------------------------------------------------------
இம்மேதின நன்னாளில் தொழிலாளர் அனைவரும் நலம், வளம் பெற்று வாழ இறைவனை துதிப்போம். 
............................................................................................................................................................

Wednesday, April 27, 2011

ஸ்ரீ ராமன் துதி

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராம என்றிரண்டே ழுத்தினால்.

நாடிய பொருள்கை கூடும் ஞானமும் புகழும் உண்டாம்
வீடியல் வழிய தாக்கும் வேரியம் கமலை நோக்கும்
நீடிய அரக்கர் சேனை நீறுபட் டழிய வாகை
சூடிய சிலையி ராமன் தோள்வலி கூறு வோர்க்கே.


மும்மைசால் உலகுக் கெல்லாம் மூலமந்திரத்தை முற்றும்
தம்மையே தமர்க்கு நல்கும் தனிப்பெரும் பதத்தைத் தாமே
இம்மையே எழுமை நோய்க்கும் மருந்துமாம் இராமன் என்னும்
செம்மைசேர் நாமம் தன்னைக் கண்களில் தெரியக் கண்டார்.

Tuesday, April 26, 2011

ஸ்ரீ ஆஞ்சநேயர் துதி

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்றாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவனெம்மை அளித்துக் காப்பான்.

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா by MSS



மூதறிஞர் ராஜாஜி அவர்களிய 
குறை ஒன்றும் இல்லை 

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா 
குறை ஒன்றும் இல்லை கண்ணா 
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா 

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா 
குறை ஒன்றும் இல்லை கண்ணா 
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா 

கண்ணுக்கு தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா 
கண்ணுக்கு தெரியாமல் நின்றாலும் எனக்கு 
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா 

வேண்டியதை தந்திட வேங்கடேஸன் நின்றிருக்க 
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா 
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா 

திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா - கண்ணா 
திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா 
உன்னை மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார்  
திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா 
உன்னை மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார் 
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா 
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா 

குன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா 
குன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா  
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா 

கலிநாளுக்கிறங்கி கல்லிலே இறங்கி 
நிலையாகக்  கோயிலில் நிற்கின்றாய் கேசவா 
கலிநாளுக்கிறங்கி கல்லிலே இறங்கி 
நிலையாக கோயிலில் நிற்கின்றாய் கேசவா 

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
யாரும் மறுக்காத மலையப்பா 
யாரும் மறுக்காத மலையப்பா -உன் மார்பில் 
ஏதும் தர நிற்கும் கருணைக் கடல் அன்னை 
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு 
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு 
ஒன்றும் குறை இல்லை மறைமூர்த்தி கண்ணா  
ஒன்றும் குறை இல்லை மறைமூர்த்தி கண்ணா

மணிவண்ணா மலையப்பா 
கோவிந்தா கோவிந்தா  
கோவிந்தா கோவிந்தா  
கோவிந்தா கோவிந்தா