ஏறு மயில் ஏறி விளையாடும் முகம் ஒன்று ஈசனுடன் ஞான மொழி பேசும் முகம் ஒன்று கூடும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்று குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்று மாறு படு சூரரை வடித்த முகம் ஒன்று வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்று ஆறுமுகமான பொருள் நீ அருள வேண்டும் ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமானே!
No comments:
Post a Comment