Thursday, March 24, 2011

யாதுமாகி நின்றாய் காளி

யாதுமாகி நின்றாய் காளி
எங்கும் நீ நிறைந்தாய் 
தீது நன்மை எல்லாம் காளி 
தெய்வ லீலை அன்றோ 
பூதம் ஐந்தும் ஆனாய் காளி
பொறிகள் ஐந்தும் ஆனாய்
போதமாகி நின்றாய் காளி
பொறியை விஞ்சி நின்றாய் 
இன்பமாகி விட்டாய் காளி
என்னுள்ளே புகுந்தாய் பின்பு
நின்னை அல்லாமல் காளி
பிரிது நானும் உண்டோ ?
அன்பளித்து விட்டாய் காளி
ஆண்மை தந்து விட்டாய்
துன்பம் நீக்கி விட்டாய் காளி
தொல்லை போக்கி விட்டாய்

 
மகாகவி பாரதியார் 

குரு பிரம்மா குரு விஷ்ணு

 ஸூக்லாம்பர தரம் விஷ்ணும் ஸசிவர்ணம் சதுர்புஜம்

பிரன்ன வதனம் த்யாயேத் ர்வ விக்னோப ஸாந்தயே

குரு பிரம்மா குரு விஷ்ணு 
குருதேவா மகேச்வரா 
குரு சாக்ஷாத் பரம் பிரம்மா 
தஸ்மை ஸ்ரீ குருவே நமஹா ! 

கணபதி என்றிட கலங்கும் வல்வினை

கணபதி என்றிட கலங்கும் வல்வினை 
கணபதி என்றிட காலனும் கை தொழும் 
கணபதி என்றிட கருமம் ஆதலால் 
கணபதி என்றிட கவலை தீருமே ! 

ஸ்ரீ ராகவேந்திரர் மந்திரம்

ஸ்ரீ ராகவேந்திரர் த்யான மந்திரம்

 பூஜ்யாய ஸ்ரீ ராகவேந்த்ராய 
சத்யா தர்ம ரதாய ச்ச
பஜதாம் கல்ப வ்ருக்ஷாய 
நமதாம் காமதேனுவே ! 

ஆறிரு தடந்தோள் வாழ்க

ஆறிரு தடந்தோள் வாழ்க 
ஆறுமுகம் வாழ்க வெற்பைக் 
கூறு செய் தனி வேல் வாழ்க 
குக்குடம் வாழ்க -செவ்வேல் 
ஏறிய மஞ்ஞை வாழ்க 
ஆணை தன் அணங்கு வாழ்க
மாறிலா வள்ளி வாழ்க 
வாழ்கசீர் அடியார் எல்லாம் !


வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா !

Wednesday, March 23, 2011

தவத்திரு திருமூலர் அருளிய கணபதி காப்புச் செய்யுள்

தவத்திரு திருமூலர் அருளிய கணபதி காப்புச் செய்யுள்
ஐந்து கரத்தனை 
 ஆனை முகத்தனை
இந்து இளம்பிறை
 போலும் எயிற்றனை 
நந்தி மகன் தனை
 ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்து, அடி

Friday, March 18, 2011

பௌர்ணமி பூஜை


உ 
பௌர்ணமி பூஜை

பௌர்ணமி அன்று ஸ்ரீ சந்திரனை நோக்கி கீழ் கண்டவாறு பூஜை செய்ய தீராத பல பிரச்சினைகள் தீரும் என்று தவத்திரு சஞ்சீவ ராஜா ஸ்வாமிகள் அருளினார்.
ராஜ் tv-யில் நேரடி ஒளிபரப்பில் இதனை வழங்கினார்.

பூஜை முறை
நட்சத்திர கோலம் இட்டுவாழை இலையில் மஞ்சள் குங்குமம் வாழைப்பழம் படையல் வெண்மை நிறத்தையொத்த நெய் வேத்யம் ( வெண்பொங்கல் தயிர் சாதம் சுண்டல் பச்சரிசி சாதம் ஏதாவது)
குத்து விளக்கு ஏற்றி வைக்கவும்.
மரக்கா படி இருந்தால் நெல் மணிகளை நிரப்பி (நெல் இல்லையெனில் அரிசி )அதன் மேல் இரண்டு மாவிளக்கு தீபம் ஸ்ரீ சந்திரனை நோக்கி ஏற்ற வேண்டும்.விளக்குக்கு நெய் விட்டு ஏற்றவும்.

பிறகு, கீழ்காணும் மந்திரத்தை 20 முறை உச்சரிக்கவும்.

ஒம் ஸோமச், ச யேம ரூப
சர்வபாப நிவாரண
பத்மச், ச மாதா சுபயோக கடாட்ச், ச
மதி பிரகாச அனுக்கிரக ததாஸ்து

பிறகு ஊதுவத்தி ஏற்றி காட்டிக் கொண்டே நெய்வேத்திய படையலை வலம் வந்து இரண்டு முறை மீண்டும் உச்சரிக்கவும்.
பிறகு ஆரத்தி காட்டவும்.

மரக்கா படி இல்லையெனில் வீட்டில் உள்ள சுத்தமான பாத்திரத்தை உபயோகிக்கலாம்.

இவர் கூறிய பல விஷயங்கள் வாழ்வில் பல சந்தர்ப்பங்களில் ஒத்து போயுள்ளது.அதே சமயம் மிகவும் யதார்த்தமாக கூறி புரிய வைக்கும் இவரின் விளக்கங்கள் பாமரனுக்கும் விளங்கும்.அதோடு நின்று விடாமல் எவரையும் தெளிவு கொள்ள வைக்கும்.இவரின் நேரடி பேட்டி தற்போது வாரந்தோறும் ராஜ் டிவியில் சனிக்க்ழமை காலை 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

இவரின் வலை முகவரி: sanjevi.கம


Tuesday, March 15, 2011

ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் LYRICS


ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி
ஸ்ரீ தேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி
இன்பம் பொங்கும் தென் கங்கை நீராடி
தென்றல் போல நீ ஆடடி
மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடி தெய்வ பாசுரம் பாடடி


ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி
ஸ்ரீ தேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடிகொள்ளிடம் நீர்மீது நர்த்தனம் ஆடும்
மெல்லிய பூங்காற்று மந்திரம் பாடும்
தேன் கனி மேலாடும் மாமரம் யாவும்
ரங்கனின் பேர்சொல்லி சாமரம் வீசும்
அந்த் நாளில் சோழ மன்னர்கள் ஆக்கிவைத்தனர் ஆலயம்
அம்மாடி என்ன சொல்லுவேன் கோயில் கோபுரம் ஆயிரம்
தெனாக நெஞ்சை அள்ளுமே தெய்வ பூந்தமிழ் பாயிரம்ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி
ஸ்ரீ தேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி


கன்னடம் தாய் வீடு என்றிருந்தாலும்
கன்னி உன் மறுவீடு தென்னாகமாகும்
கங்கையின் மேலான காவிரி தீர்த்தம்
மங்கள நீராட முன்வினை தீர்க்கும்
நீர் வண்ணம் எங்கும் மேலிட நஞ்சை புஞ்சைகள் பாரடி
ஊர்வண்ணம் என்ன கூறுவேன் தெய்வலோகமே தானடி
வேறெங்கும் சென்ற போதிலும் இந்த இன்பங்கள் ஏதடி


ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி
ஸ்ரீ தேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி

Sunday, March 13, 2011

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே பாடல் வரிகள்புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே-எங்கள்
புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்


புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களேஎங்கள்
புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்
வண்டாடும் கங்கை மலர் தோட்டங்களே-எங்கள்
மதுசூதனன் புகழ் பாடுங்களேன்
வண்டாடும் கங்கை மலர் தோட்டங்களே-எங்கள்
மதுசூதனன் புகழ் பாடுங்களேன்


புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே-எங்கள்
புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்

பன்னீர் மலர்  சொரியும் மேகங்களே-எங்கள்
பரந்தாமன் மெய் அழகைப் பாடுங்களேன்
பன்னீர் மலர் சொரியும் மேகங்களே-எங்கள்
பரந்தாமன் மெய் அழகைப் பாடுங்களேன்
தெங்கோடி தென்றல் தரும் ராகங்களே- எங்கள்
ஸ்ரீ கிருஷ்ணன் மூர்த்தி புகழ் பாடுங்களேன்
எங்கள் ஸ்ரீ கிருஷ்ணன் மூர்த்தி புகழ் பாடுங்களேன்


புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே-எங்கள்
புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்
குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன்
ஒரு கொடியோடு  மதுராவை ஆள்கின்றவன்
குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன்
ஒரு கொடியோடு மதுராவை ஆள்கின்றவன்
திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன்
அந்த ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்
அந்த ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்


புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே-எங்கள்
புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்


பாஞ்சாலி புகழ் காக்க தன் கை கொடுத்தான் -அந்த
பாரதப் போர் முடிக்க சங்கை எடுத்தான்
பாஞ்சாலி புகழ் காக்க தன் கை கொடுத்தான் -அந்த
பாரதப் போர் முடிக்க சங்கை எடுத்தான்
பாண்டவர்க்கு உரிமை கொண்ட பூமி கொடுத்தான் -நாம்
படிப்பதற்கு கீதை என்னும் பாடம் கொடுத்தான்புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே-எங்கள்
புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்